Toronto வில் பனிப்பொழிவு; மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது

205

GTA முழுவதும், இந்த குளிர்காலத்தில் இதுவரை பதிவாகக்கூடிய மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, Toronto விற்காக பனிப்பொழிவு குறித்த மஞ்சள் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 9 முதல் 10 மணிக்குள் பனிப்பொழிவு தொடங்கி, GTA -வின் சில பகுதிகளில் 20 cm க்கும் அதிகமான பனி பதிவாகலாம். Downtown Toronto வில் 5 முதல் 15 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Toronto வின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளான Scarborough, York Region, Durham Region ஆகிய இடங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்படலாம். இதனுடன் வலுவான காற்று வீசுவதால் பனித்தூசி உருவாகி பார்வைத் தெளிவு குறையக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் கனமான பனிப்பொழிவு நிகழ்வதால், வியாழக்கிழமை காலை பயணம் கடினமாக இருக்கும் என்றும், சாலைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக பாடசாலை பேருந்து சேவைகள் ரத்து செய்யப்படும் சாத்தியமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.