TikTok காதலால் வந்த வினை! சிக்கிய இரண்டு “மன்மதராசாக்கள்”

125

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாயமான நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TikTok மூலம் அறிமுகமான கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனுடன் சிறுமி வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளவாலை மற்றும் நெல்லியடி பொலிஸாரின் இணைந்த நடவடிக்கையால் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட இளைஞன் சிறுமியை அழைத்துச் சென்றது உண்மை என்றாலும் தவறான செயல்களில் ஈடுபடவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேவேளை, சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தற்போதைய இளைஞன் அல்லாமல், முன்னாள் காதலன் ஒருவராலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக சிறுமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தற்போதைய காதலனும், முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர் சமூக வலைத்தள பயன்பாட்டில் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.