Royal Enfield Electric Bike (FF C6): பாரம்பரிய வடிவமைப்பும் நவீன மின்சார தொழில்நுட்பமும்.

78

இந்தியாவின் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ராயல் என்ஃபீல்ட், தனது முதல் மின்சார பைக்கை வெளியிடத் தயாராகி வருகிறது.

Flying Flea (FF C6) எனப்படும் இந்த மாடல், சென்னை நகரில் சோதனை ஓட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியீடு மிக அருகில் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த மின்சார பைக், 2025-ல் இத்தாலியில் நடைபெற்ற EICMA மோட்டார் கண்காட்சியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.2026 முதல் காலாண்டில் (Q1) அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

  • வட்ட வடிவ ஹெட்லைட்
  • Girder front forks
  • அலாய் வீல்கள்
  • வலது பக்கத்தில் Belt Drive அமைப்பு
  • IP67 தரச்சான்று பெற்ற பேட்டரி
  • Bluetooth இணைப்பு கொண்ட டிஜிட்டல் மீட்டர்
  • Turn-by-turn Navigation, Call & Message Alerts

இந்த பைக்கின் 4-5 kWh பேட்டரி 100 முதல் 150 கிமீ வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். செயல்திறன், 250cc-350cc பெட்ரோல் பைக்குகளுக்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சோதனை ஓட்டத்தில், பைக்கில் மெயின் ஸ்டாண்ட் (Center Stand) பொருத்தப்பட்டிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது தினசரி பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்ட், தனது பாரம்பரிய Flying Flea (இரண்டாம் உலகப் போரின் காலத்து மாடல்) வடிவமைப்பை மின்சார பைக்கிலும் தொடர்கிறது. இதன் மூலம், பழைய க்ரூசர் தோற்றத்தையும், புதிய மின்சார தொழில்நுட்பத்தையும் இணைக்கிறது.