“இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன.!

59

இவ்வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன (Krishantha Abeysena) தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

எனினும், இந்த ஆண்டின் எந்த காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தற்போது உறுதியாக தெரிவிக்க முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடைபெறும். அதனை தாமதப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.