பிஸ்கட் காகிதத்திற்குள் ‘ஐஸ்’ – சிறையில் சிக்கிய தாய் – மகள்.! 

102

சிறையிலிருக்கும் கைதிக்கு பிஸ்கட் கொடுக்க வந்த இடத்தில், சிறை அதிகாரிகளுக்கே “ஷாட்” கொடுக்க முயன்ற தாய் மற்றும் மகளின் பலே திட்டம் அம்பலமாகியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலைக்கு தனது உறவினரைப் பார்க்க 38 வயது தாயும், 19 வயது மகளும் வந்துள்ளனர். கையில் ஒரு பாக்கெட் சாக்லேட் கிரீம் பிஸ்கட்.. பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தெரிந்தாலும், அதற்குள் ஒளிந்திருந்தது ஒரு பாரிய சதி.

பிஸ்கட்களுக்கு நடுவே இருந்த கிரீமை லாவகமாக அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஹெரோயின் மற்றும் ஐஸ் (Ice) போதைப்பொருட்களை வைத்து மீண்டும் ஒட்டி பேக் செய்துள்ளனர். சோதனையின் போது சிறை அதிகாரிகளின் கழுகுப் பார்வையில் இந்த “போதை பிஸ்கட்” சிக்கியது.

  • ஐஸ் போதைப்பொருள் – 680 மில்லி கிராம்
  •  ஹெரோயின் – 3140 மில்லி கிராம்

தலாத்துஓயா, உனுவின்ன பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, தற்போது பல்லேகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாசத்திற்காக பிஸ்கட் கொடுக்கப் போய், இப்போது இருவரும் சிறைக்கதவுகளுக்குப் பின்னால் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலை அத்தியட்சகர் சம்பத் வர்ணகுலசூரிய தலைமையிலான குழுவினர் இந்த கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.