“Green Jaffna Project” மரநடுகைச் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்.

133

 

யாழ்ப்பாணத்தை பசுமையாக்கும் நோக்கில் முக்கியமான சுற்றுச்சூழல் முயற்சியாக, யாழ்ப்பாண மருத்துவச் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவை இணைந்து “Green Jaffna Project” எனப்படும் மரநடுகைச் செயற்றிட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மருத்துவத் துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் யாழ்ப்பாணப் பகுதியை பசுமையான நகரமாக மாற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மரநடுகை மூலம் காற்றுத் தரத்தை மேம்படுத்துதல், வெப்பநிலையை குறைத்தல் மற்றும் உயிரியல் பல்வகைமையை பாதுகாத்தல் போன்ற பல நன்மைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் எதிர்காலத்திலும் பல கட்டங்களாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மரநடுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.