சோகத்தில் மூழ்கிய மன்னார் படகுதுறை 18ஆம் ஆண்டு நினைவுப்பகிர்வு.

76

மன்னார் படகுத்துறை படுகொலை நினைவுப்பகிர்வு.

02.01.2007

மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர கிராமத்தில் சிங்கள இனவெறி படை நடத்திய கிபீர் விமானத் தாக்குதலில் அங்கிருந்த 35 வீடுகளும் அழித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன

இதில் 9வயது உட்பட ஏழு குழந்தைகள் ஒரு கர்ப்பணி அவரின் குழந்தை கணவர் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

குறித்த நாளான்று காலை 9.30 மணியளவில் கடலோரத்தை ஒட்டிய பகுதியில் கிபீர் விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமாக 14 முறை குண்டுகள் வீசப்பட்டது

 

இந்தத் தாக்குதலில் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டைத்தவிர அனைத்து குடிசைகளும் முற்றிலும் சேதம் அடைந்தன

அந்த வீடு மட்டும் பகுதியளவில் தப்பியது

நிகழ்விடத்துக்கு அருகில் உள்ள மன்னாரில் இருந்து படகுத்துறைக்குச் சென்ற அவசர சிகிச்சை ஊர்திகளை உயிலங்குளம் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி மேற்கொண்டு போகவிடாமல்  இராணுவம் தடுத்தது

இதனால் மிகமோசமாக காயமடைந்தவர்கள் முழங்காவில் மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து இலுப்பக்கடவையில் இருந்து 80km தொலைவைக் கடந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்

 

கிளிநொச்சியில் இருந்து இலுப்பக்கடவைக்கு அனுப்பப்பட்ட இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளிலேயே காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்

அதற்கு முன்பே படுகாயம் அடைந்த 03 குழந்தைகளும் ஒரு கர்ப்பணியும் அவரின் கணவரும் முழங்காவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்

 

கிபீர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு அன்றைய மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை நேரில் சென்று நிலைமையை கண்டறிந்தார்

 

அவரைத் தொடர்ந்து பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் படகுத்துறைகுச் சென்று பார்வையிட்டனார்

 

விமானத் தாக்குதலின் இலக்கு புலிகளின் நிலையென அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய் என என்று ஆயார் இராயப்பு யோசேப்பு ஆண்டகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

 

யாழ்ப்பாண மாவட்டம் நாவந்துறை மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் இருந்து 1995இல் இடம்பெயர்ந்து வந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 231 பேரே படகுத்துறையில் வசித்து வந்தனர்

 

யார் கண்ணுக்கும் தெரியும்படி அங்கு சிறு படகுத்துறை கூட இல்லை இம் மக்களை எத்தனையோ வருடங்கள் எனக்கு நன்றாகத் தெரியும்

 

எந்தவித உபகரணங்களும் இல்லாமல் ஆழமற்ற கடலில் தினந்தோறும் குறைவாக மீன் பிடித்துவாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்

 

இந்த இடமானது அடைக்கலம் தேடி வந்த மக்களுக்கான அமைதியான இடமாக இருந்தது

 

மீண்டும் சொல்கிறேன் இந்த இடம் எந்தவித இராணுவ நிலையோ புலிகள் முகாமோ அல்ல

 

இந்தத் தாக்குதலானது அரச பயங்கரவாதமே என்றார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை  அவர்கள் திட்டவட்டமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

இச்சம்பவத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்

 

1:-அ.ஆனந்தி (வயது 32)

2:-அ.விதுசன் (வயது 04)

3:-அ.இராஜகுமாரி (வயது 57)

4:-அ.சத்தியப்பிள்ளை (வயது 26)

5:-கு.தயாழன் (வயது 02)

6:-கு.வலஸ்தீனா (வயது 30)

7:-ப.ஜமேசன் (வயது 12)

8:-ச.மதுசன் (வயது 01)

9:-உதயகுமார் (வயது 55)

10:-உ.மாலினி (வயது 27)

11:-உ.தர்சிகா (வயது 01)

12:-வி.வினோயன் (வயது 04)

13:-வி.தர்சினி (வயது 09)

14:-வி.விஜிதா (வயது 35)

15:-அ.குகன் (வயது 36)