வயல்வெளியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு.!!

43

தெஹியத்தக்கண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்வெவ பகுதியில் வயல்வெளியொன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த மரணம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தெஹியத்தக்கண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.