கெக்கிராவில் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!

65

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குளமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  நேற்று திங்கட்கிழமை (20) காலை, குறித்த பகுதியில் குளம் ஒன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக கெக்கிராவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.