யாழ். கட்டைக்காட்டில் வீடுகளைத் தாக்கி குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வரும் நபர் ; பொலிஸில் முறைப்பாடு!

183

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் நபரொருவரால் நான்கு வீடுகள் புதன்கிழமை  (15) இரவு  தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவர் நான்கு வீடுகளைத்   தாக்கியுள்ளார். இதனால் வீடொன்றில் உள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடைமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக அங்கிருப்பவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு அளித்துள்ளனர்.