பெருந்தொகையான சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது.!

90

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்னொருவ பகுதியில் புதன்கிழமை (15) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 101 லீற்றர் 250 மில்லி லீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானமும், மதுபானம் தயாரிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,110 லீற்றர் கோடா (06 பீப்பாய்கள்) என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மொரகஹஹேன பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.