லக்னோவை 5 விக்கெட்டில் வீழ்த்தி RCB அபார வெற்றி.!

119

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் (40), ஆயுஷ் பதோனி (38), முகுல் சவுத்ரி (39) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டானதால் அணி தடுமாறியது. குறிப்பாக நிக்கோலஸ் பூரன் 1 ரன்னில் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆர்சிபி தரப்பில் ராசிக் சலாம் தார் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி லக்னோ அணியை கட்டுப்படுத்தினர்.

147 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 49 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார்.

ரஜத் படிதார் 27 ரன்கள் சேர்த்த நிலையில், இறுதியில் டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.

15.1 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி, சொந்த மைதானத்தில் இந்த வெற்றியால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.