அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பொலீசாரால் தடை?

149

 

வடமராட்சிக் கிழக்கில் பதற்றம்: அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பொலீசாரால் தடை?

வடமராட்சிக் கிழக்கில் பயணித்துக் கொண்டிருந்த அன்னை பூபதியின் ஊர்தி மருதங்கேணி பகுதியில் பொலீசாரால் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊர்தியில் பயணித்தவர்களின் தகவலின்படி, மருதங்கேணி பொலீசார் திடீரென ஊர்தியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடை எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.