பரந்தனில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

146
  • சிவபுரத்தில் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நடைபெற்றது.

நிகழ்வுகள் காலை நேரத்தில் உணர்வுபூர்வமான நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சிவபுரம் கிராமத்திற்கான புதிய பெயர் பலகை, இரு மாவீரர்களின் நினைவாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களின் மரியாதையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, காலை ஆரம்பித்த பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள்—இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தன. மகிழ்ச்சியும் போட்டித் தன்மையும் கலந்து நடைபெற்ற இந்நிகழ்வுகள் மாலை வரை நீடித்தன.

இறுதியில், வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி கேசவன் சயந்தன் (மேனாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர், தொகுதிகளைத் தலைவர், இலங்கை தமிழரசு கட்சி – சாவக்கச்சேரி) கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் பல சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.