கொலையாக மாறிய அயல் வீட்டுத் தகராறு : 46 வயது நபர் பலி, சந்தேகநபர் கைது.!!

147

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் சனிக்கிழமை (11) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 46 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் போருவதண்ட பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கும் அயல் வீட்டாருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.