கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு : 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பறிமுதல்.!

19

மேல் மாகாணத்தின் கொழும்புப் பகுதியில் உள்ள சில விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சோதனையில், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுங்கவரித் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்கவரி விசேட அதிரடிப்படையினரின் 4 குழுக்களுடன் சுமார் 30 உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், புத்தாண்டு காலத்தை இலக்கு வைத்து விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த இந்த மதுபானங்களில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு வில்லைகள் போலியானவை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மதுபான கையிருப்பு எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்; வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.