அரச வைத்தியர்களின் 48 மணி வேலைநிறுத்தம் முடிவு: சேவைகள் மீண்டும் வழமையானது.!

116

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (11) சனிக்கிழமை காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணியுடன் வேலைநிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகள் மீண்டும் வழமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்ஹ தெரிவித்ததாவது, திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நிறைவடைந்துள்ளதாகவும், அதன் பின்னர் அனைத்து மருத்துவ சேவைகளும் மீண்டும் இயல்புநிலைக்கு வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இந்தப் பிரச்சினை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்..

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அதனை பொதுமக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் கவனம் நிலவுகிறது.