வீட்டுக்குள் நடந்த கொடூரம் — வாடகையாளர்களால் முதியவர் கொலை என சந்தேகம்!

115

வவுனியா கூமாங்குளத்தில் 72 வயது முதியவர் கொலை — வாடகை பணம் கேட்க சென்றபோது சோகம்!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த முதியவர், தமது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தவர்களிடம் வாடகை பணத்தை பெறுவதற்காக சென்றிருந்த நிலையில், அவர்களால் வாயில் துணி வைத்து மூச்சுத்திணறச் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில், இந்த மரணம் கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வவைனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.