கடைசி ஓவரில் சவுத்ரி சிக்சர் மழை: கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அதிரடி வெற்றி.!

115

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

அஜின்கியா ரஹானே அதிரடியாக 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். பின்னர் 182 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் தடுமாறி, ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

மிடில் ஆர்டரில் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 45 ரன்களும், ரோவ்மன் பவல் 39 ரன்களும் சேர்த்து கொல்கத்தாவை வலுவான நிலையில் நிறுத்தினர்.

லக்னோ அணிக்காக ஆயுஷ் பதோனி 54 ரன்கள் எடுத்தாலும், அவரது அவுட் பிறகு போட்டி கொல்கத்தா பக்கம் சாய்ந்தது போல தோன்றியது.

ஆனால் 7ஆவது பேட்ஸ்மேனாக வந்த முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 54 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 சிக்சர்கள் அடித்து லக்னோ அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்து, தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.