மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு.!!

150

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபனாகல பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, வீட்டின் அருகிலுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்குக் குடை கொடுத்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சென்றிருந்த போது, மின்னல் தாக்கியதில் குறித்த யுவதி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் பிரதேச மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.