வலம்புரிச் சங்கை ரூ.35 இலட்சத்திற்கு விற்க முயன்றவர் கைது.!!

135

களுத்துறை பகுதியில் வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், களுத்துறை பஸ் டிப்போவிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றது.

சோதனையின் போது, வலம்புரிச் சங்கு ஒன்றை 35 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சட்டவிரோத பொருட்கள் விற்பனைக்கு எதிரான கண்காணிப்புகள் மேலும் தீவிரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.