சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி!

320

சகோதரன் கத்திக்குத்தில் சகோதரி உயிரிழப்பு– வவுனியாவில் அதிர்ச்சி!

வவுனியா மாவட்டத்தின் சொக்கடிப்பிலவு கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமான முடிவுக்கு சென்றுள்ளது.

56 வயதுடைய பெண் ஒருவர், தனது சகோதரனால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று இரவு நேரத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

 

சம்பவத்திற்குப் பின்னர், குற்றச்சாட்டுக்குட்பட்ட சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.