திருகோணமலை புகையிரத நிலைய தீ விபத்து – இயந்திரம் தீக்கிரை!

141

திருகோணமலை புகையிரத நிலையத்தில் புகையிரத இயந்திரம் ஒன்று தீக்கிரை

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்றைய தினம் (8) மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்துக்கு வரும் புகையிரதங்களை நிலைய எல்லைக்குள் கொண்டு சென்று நிறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த எஞ்சின், இன்று மதியம் கொழும்பு இருந்து வந்த புகையிரத பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தீப்பற்றியதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இருப்பினும் தீயணைப்பு படையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் தகவல் வழங்குவார்கள் என பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தால் புகையிரத இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றநிலையில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.