அம்பாறையில் யானை தாக்குதல்: 48 வயது பெண் உயிரிழப்பு.!

197

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் தனது வீட்டின் முற்றத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று புதன்கிழமை (8) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில், 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் சடலம் இன்று பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண், மல்வத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி யானைகள் வழி மாறிச் செல்லும் பாதையாக இருப்பதாகவும், ஏற்கனவே குறித்த பெண் யானை தாக்குதலுக்கு உள்ளாகி காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் யானை தாக்குதல்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.