கட்டுநாயக்கில் சிகரெட் கடத்தல்: 5 சீன வர்த்தகர்கள் கைது.!!

94

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று புதன்கிழமை (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 01.10 மணியளவில் ‘சைனா ஈஸ்டர்ன்’ விமான சேவையின் MU-713 என்ற விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘செவன் ஸ்டார்’ ரகத்தைச் சேர்ந்த 34,800 சிகரெட்டுகள் அடங்கிய 174 கார்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வற்றின் மொத்த பெறுமதி சுமார் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு வயதுடைய சீன வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டிற்குள் சட்டவிரோத பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.