பெண்களே 25 வயதைக் கடந்துவிட்டீர்களா? ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க தினசரி பழக்கங்கள்.

133

ஆரோக்கியமாகவும் மன உறுதியுடனும் வாழ, தினசரி உணவில் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சேர்ப்பது முக்கியம். மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்பு மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் சாப்பிடுவது நல்லது. இவை விட்டமின் ‘E’, புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை வழங்கி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

மேலும், தினமும் ஒரு அப்பிள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் எலும்பு பலத்திற்கும் உதவுகிறது. அதோடு, பெர்ரி பழங்கள், வெண்ணைப் பழம், தோடம்பழம், எலுமிச்சை, திராட்சை, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களையும் உணவில் சேர்ப்பது நல்லது.

இப்பழங்களில் விட்டமின் ‘C’ மற்றும் ‘E’ அதிகம் இருப்பதால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இரவில் உறங்குவதற்கு முன் ஒரு கோப்பை பால் குடிப்பது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.

இவற்றுடன், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். தினசரி வாழ்க்கையில் தியானம், யோகா, நடைபயிற்சி அல்லது ஓட்டம் போன்ற செயல்பாடுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, தசைகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. சரியான உணவு மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றினால் எந்த வயதிலும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.