யாழ். அனலைதீவில் அதிர்ச்சி – ஆயுதங்கள் மீட்பு!

166

யாழ். அனலைதீவில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு – துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆயுதங்கள் நீண்ட காலமாக அங்கு புதைந்து கிடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊர்காவல்துறை பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றதுடன், அவற்றை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எங்கும் காணப்பட்டால், அவற்றை தொடாமல் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.