இணுவில் கிணற்றில் மர்ம சடலம்: அடையாளம் தெரியாத ஆண்!

165

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் ச*டலம் மீட்கப்பட்டுள்ளது.

இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த ச*டலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிணற்றில் ச*டலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயி*ரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.