தோட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

150

கினிகத்தேனை, கெனில்வர்த் தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் போது சிறுத்தை இறந்து கிடப்பதை கண்டதும், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், இந்த விடயம் குறித்து நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள், உயிரிழந்த சிறுத்தையின் உடலை மீட்டுள்ளனர்.

சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.