இரு பெண்கள் உட்பட புதையல் தோண்டிய 11 பேர் கைது.!

215

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது, புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை மற்றும் திக்கோடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஸ்கானர் இயந்திரம் மற்றும் ஒரு வேனும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பொலிஸார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளனர்.