ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் காலமானார்.

171

வீதி விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் தனது 47ஆவது வயதில் காலமானார். இந்த சம்பவம் சனிக்கிழமை (ஏப்ரல் 04) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு ‘லக்பிம’ தினசரி பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர் குழு உறுப்பினராக தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் ‘தினமின’ மற்றும் ‘ரிவிர’ உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். காலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவராகவும் அறியப்பட்டவர்.

அவரின் பூதவுடல் சனிக்கிழமை (ஏப்ரல் 04) பிற்பகல் காலியின் பூஸ்ஸ, மஹகெதர வத்தையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 06) நடைபெறவுள்ளன.