மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பு.!!

174

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 04) பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கடமைக்கு சமூகமளிக்காத நிலை உருவானது.

இதன் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து வழங்குதல் மற்றும் ஊசி செலுத்துதல் போன்ற குறைந்த அளவிலான சேவைகள் மட்டுமே இடம்பெற்றதுடன், அவசர நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கை மட்டும் தொடரப்பட்டது. இதைத் தவிர மற்ற எந்த மருத்துவ சேவைகளும் வழங்கப்படாததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தூர இடங்களில் இருந்து வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். தொடர்ந்து வைத்தியர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் தங்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.