கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இரு 19 வயது இளைஞர்கள் பலி.!

281

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, முல்லைத்தீவிலிருந்து தர்மபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த இருவரும் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.