அனுமதியின்றி மண்ணெண்ணெய் கடத்தல்: 1000 லீற்றருடன் இருவர் கைது.!!

158

மொனராகலை மாவட்டம் செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி லொறி ஒன்றில் மண்ணெண்ணெய் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது இடம்பெற்றது.

செவனகல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகநபர்கள் பயணித்த லொறி மற்றும் அதில் இருந்த 1000 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 49 வயதுடைய செவனகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத எரிபொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.