திருகோணமலை வாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு: மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றல்.!

242

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

தேடுதல் நடவடிக்கையின் போது, மோட்டார் குண்டுகள் 4, மோட்டார் குண்டு சாஜ்ஜர் 2 மற்றும் ரீ-56 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் 75 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் வாய்க்காலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான பின்னணி மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணைகள் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.