கழிவகற்றல் முறையை நவீனமயப்படுதுகிறது நல்லூர் பிரதேச சபை.

221

நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றல் முகாமைத்துவம் முழுமையாக இலத்திரனியல் மயமாகிறது

நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளை முற்றாக இலத்திரனியல் மயப்படுத்தும் செயல்திட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் அவர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வரி செலுத்துனர்கள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு, நேர்த்தியானதும் வினைத்திறன் மிக்கதுமான கழிவகற்றல் சேவையினை வழங்கும் நோக்குடன் இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ள இந்த இலத்திரனியல் கழிவகற்றல் முகாமைத்துவ முறையினூடாக, சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை, நேர மேலாண்மை மற்றும் கண்காணிப்பு திறன் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் ப. மயூரன் அவர்கள் குறிப்பிட்டார்.