கொல்கத்தாவை 65 ஓட்டங்களால் வீழ்த்திய ஹைதராபாத் – மாலிங்க அசத்தல்

159

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை 65 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

இந்தப் போட்டி ஏப்ரல் 03, 2026 அன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களுக்கு 226 ஓட்டங்கள் குவித்ததுடன், பதிலுக்கு விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஹென்றிச் க்ளாசன் (52), ட்ரவிஸ் ஹெட் (46), அபிஷேக் ஷர்மா (48) ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டம் ஹைதராபாத் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. ஹெட் மற்றும் அபிஷேக் இணைந்து 34 பந்துகளில் 84 ஓட்டங்கள் சேர்த்தனர்.

பின்னர் க்ளாசன் மற்றும் நிட்டிஷ் குமார் ரெட்டி 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்கள் இணைத்தனர். பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட் 3 விக்கெட்களையும், ஏஷான் மாலிங்க மற்றும் நிட்டிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேலும், கெமரன் க்றீன் மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோரின் முக்கிய ரன் அவுட்களில் ஏஷான் மாலிங்க முக்கிய பங்காற்றினார்.

இந்த வெற்றியால் ஹைதராபாத் அணி போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக மாலிங்கின் பந்துவீச்சும் களத்தடுப்பும் அணிக்கு பெரும் பலமாக அமைந்தது.

ஆட்டநாயகனாக நிட்டிஷ் குமார் ரெட்டி தெரிவு செய்யப்பட்ட நிலையில், தொடரில் ஹைதராபாத் அணியின் முன்னேற்றம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.