கண்டி திகன வீதியில் பஸ் மோதி மாணவர் உயிரிழப்பு: மற்றொருவர் தீவிர சிகிச்சையில்..

211

கண்டி – திகன வீதியில் பல்லேகலை இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (02) காலை இடம்பெற்ற விபத்தில், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு மாணவர் காயமடைந்துள்ளார். கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டு பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தரம் 12-இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றொரு மாணவர் கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.