சுரங்கக் குழியில் 61 வயது ஆண் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை.!

203

இரத்தினபுரி – கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்தக்கந்த பகுதியில் உள்ள சுரங்கக் குழி ஒன்றில், ஒரு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் லெந்தொர பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி ஒபநாயக்க பொலிஸ் பிரிவின் லெந்தொர பகுதியில் ஒருவர் காணாமல் போனதாக, ஒபநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் விசாரணைகளின் முடிவில் மேலதிக தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.