தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

157

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் (www.doenets.lk) மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.