சி/விபுலானந்தா கல்லூரியில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கௌரவ விழா

110

சி/விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிக்கும் விழா மார்ச் 27, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் என். ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஐ.டி.எம் நேஷன் கேம்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் டாக்டர் விநாயகமூர்த்தி ஜனகன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளர் அதி வணக்கதிற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்த்ரு பெர்னாண்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். மாணவர்களின் கல்விசார் சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் விநாயகமூர்த்தி ஜனகன், இளம் தலைமுறையினர் கல்வியில் உயர்ந்த இலக்குகளை நோக்கி பாடுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் உழைப்பை ஊக்குவித்து, எதிர்கால கல்வி சாதனைகளுக்கு வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.