யாழில் வீடொன்றில் களவாடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்பு: பணிப்பெண் கைது.!

95

யாழ்ப்பாண நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட சுமார் 14 பவுண் தங்க நகைகள் யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் கணவன்–மனைவி இருவரும் பணிநிமித்தம் பகலில் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டை பராமரிக்க பணிப்பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

இதன்போது வீட்டில் இருந்த சுமார் 14 பவுண் நகைகள் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்த பொலிஸார், அந்த வீட்டில் பணிபுரிந்த 53 வயது பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து களவாடப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரப்பட்டு வருகின்றன.