யாழ் குருநகரில் கொடூர கத்தி வெட்டு தாக்குதல் – தாயும் மகனும் காயம்.!!

222

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது வெள்ளிக்கிழமை (27) மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையேயான முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் போது, கத்தி வெட்டினை மேற்கொண்ட நபரை தடுக்க தாயார் குறுக்கே வந்த நிலையில், அவரும் தவறுதலாக காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கடுமையாக காயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்துக்கு பின்னர் தாக்குதலை மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதுபோன்ற வன்முறை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகள் அவசியம் என எதிர்பார்க்கப்படுகிறது.