ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது – துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு.!

140

சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சோதனையின் போது 1 கிலோகிராம் ஹெரோயின், 515 கிராம் ஐஸ், 565 கிராம் கொக்கைன் மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகுதி துபாயில் தலைமறைவாக உள்ள இரண்டு பிரதான கடத்தல்காரர்களால் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.