அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் பட்டியல் வெளியீடு – ஏப்ரல் 10க்குள் மேன்முறையீடு செய்ய அறிவுரை.

102

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல் இன்று வெள்ளிக்கிழமை (27) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வெளியீட்டுடன், அதனைச் சார்ந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் வழிமுறைகளையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பட்டியலில் சேர்க்கப்படாதவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கருதுபவர்கள், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக மூன்று வழிகள் வழங்கப்பட்டுள்ளன: eservices.gov.lk இணையதளம் மூலம் நேரடியாக, www.wbb.gov.lk தளத்தில் இருந்து படிவத்தைப் பெற்று பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பது, அல்லது நலன்புரி பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொடர்பாடல் மையங்கள் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிப்பது.

ஒரு நபர் ஒரே ஒரு மேன்முறையீட்டை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும், தகுதியற்ற ஒருவர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவருக்கு எதிராக அடையாளம் வெளியிடாமல் ஆட்சேபனை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மேன்முறையீடுகளும் ஏப்ரல் 10க்கு முன் கிடைக்கச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.