யாழில் யானைகள் திட்டமிட்டு விடப்பட்டு 36 தென்னைகள் நாசம் – குடும்பஸ்தர் கவலை.!

177

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் வாழும் குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார். இவரின் குற்றச்சாட்டின் படி, யானைகள் ஏற்படுத்திய சேதத்தைக் அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை என்றும், சம்பவம் குறித்து உரியவர்களுக்கு அறிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் கட்டைக்காடு – கேவில் கடற்கரைக்கு வந்ததாகவும், 36 இற்கும் அதிகமான தென்னைகள் நாசம் செய்யப்பட்டதாகவும் குடும்பஸ்தர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர்புடையவர்களுக்கு தெரிவித்தாலும், இதுவரை யானைகள் சேதம் ஏற்பட்ட இடத்தில் பார்வையிடவோ அல்லது நஷ்ட ஈடு வழங்கவோ செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருப்பினும், இராணுவத்தினர் யானைகள் வந்து சேர்ந்ததை அறியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி, கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான நிலப்பரப்பு தேசிய பூங்கா என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்ய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைகளை கட்டைக்காட்டில் கொண்டு வந்து விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. குடும்பஸ்தர் யானைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கும், அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கான இழப்பீடு வழங்கப்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.