ஊதியம் வழங்காதது மனித உரிமை மீறல்: சுகாதார தொழிலாளியின் போராட்டம் கவனம் ஈர்ப்பு போராட்டம்.!!

116

பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9ஆம் மாதங்களில் தமக்கான ஊதியம் வழங்கப்படாதது மனித உரிமை மீறலாகும் என சுகாதார தொழிலாளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலைமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், “நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், பொத்துவில் பகுதியில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனியில் அவர் ஈடுபட்டார்.

மேலும், தமக்கு ஏற்பட்ட அநீதியை விளக்கி தீர்வு பெறும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர் எச்.ஏ. நிபான் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவருக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்பது குறித்து அவரது குடும்பத்தினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்குவார்களா என்பது குறித்து பொதுமக்களிடையே கவனம் அதிகரித்துள்ளது.