மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – பொலிஸ் விசாரணை!

152

கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதென்ன பகுதியில், மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (25) காலை மீட்கப்பட்டது. சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடுகஸ்தொட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மீட்கப்பட்ட சடலம் சுமார் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சடலம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைந்திருந்ததோடு, நிர்வாணமான நிலையிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சிகளும், மரணத்திற்கான காரணத்தை விசாரிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலதிக விசாரணைகளை கடுகஸ்தொட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவம் குறித்து பொதுமக்களிடையே கவலையும் எழுந்துள்ளது.