சட்டவிரோத எரிபொருள் குவிப்பு: 6,600 லீற்றர் டீசலுடன் நபர் கைது.!

215

மொரகஹஹேன, கோனபொல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சோதனையின் போது, சந்தேகநபரின் வீட்டின் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் பரிசோதிக்கப்பட்டதில், பாணந்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பௌசரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 152 லீற்றர் டீசல் மற்றும் 120 லீற்றர் பெற்றோல் அடங்கிய பீப்பாய்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத எரிபொருள் குவிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.