ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இரட்டை கொலை மர்மம்!

117

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி கொலை மர்மம்!

கோவிட் காலமான 2020ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் வெல்லம்பிட்டியாவில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளில், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தம்பதியர் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் துண்டிக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு தம்பதியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு நபரை கைது செய்ய பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பல ஆண்டுகளாக மறைந்திருந்த இந்த மர்மம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவுகிறது.